MARC காட்சி

Back
அயன்தென்கரை ஸ்ரீஅய்யனார் கோயில்
245 : _ _ |a அயன்தென்கரை ஸ்ரீஅய்யனார் கோயில் -
246 : _ _ |a ஐந்துவாசல் அய்யனார் கோயில்
520 : _ _ |a சோழவந்தான் தென்கரை ஊராட்சி ஊத்துக்குழி பூர்ணகலா, பொற்கலை உடனுறை ஐந்துவாசல் அய்யனார் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 2016 சூலைத் திங்கம் 15-ஆம் நாள் நடந்தது. கிராமக்குழு மற்றும் திருப்பணிக்குழுவினர் இந்நிகழ்வினை மேற்கொண்டனர். ஐந்துவாசல் அய்யனார் தொன்றுதொட்டு சோழவந்தான் தென்கரைப்பகுதியில் மக்களால் வழிபடப்பட்டு வரும் காவல் தெய்வமாவார். ஐந்துவாசல் அய்யனார் கோயில் புரவி எடுப்புத் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள தென்கரை குளத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. அய்யனாருக்கு புரவி எடுப்பு என்பது காலங்காலமாக தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல்தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், ஐந்துவாசல் அய்யனார் கோயில், ஸ்ரீஅய்யனார், ஊத்துக்குளி, அயன்தென்கரை, வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a சிவகுமார், முருகேஸ்வரி, இராதாகிருஷ்ணன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a வேள்விக்குடி என்று முற்காலப்பாண்டியர் காலத்தில் அழைக்கப்பட்ட சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் மருதத்திணை ஊரைக் காக்கும் அய்யனார் ஆவார்.
914 : _ _ |a 10.0140435
915 : _ _ |a 77.8939839
923 : _ _ |a தென்கரைக்குளம்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a அய்யன் கோயில் கருவறையில் பூரணை புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் அய்யன் காட்சி தருகிறார். திறந்த வெளியில் குதிரையின் மீது அமர்ந்த இளம் வீரனாய் அய்யனின் சுதைச் சிற்பம் காணப்படுகிறது.அய்யன் முழுநீள ஆடை கணுக்கால் வரை அணிந்து, கழுத்தில் பலவித மலர்களைக் கொண்ட மாலைகளை சூடியவராய், சடைமகுடம் தரித்து, சிவச்சின்னத்தை நெற்றியில் பூசி, கையில் சாட்டையுடன், கால்களில் செருப்பு அணிந்து, வெள்ளைக் குதிரையேறி புறப்பட்ட நிலையில் இச்சிற்பம் காட்டப்பட்டுள்ளது. குதிரையின் கீழே பார்வதி பரமசிவனார் தவமிருக்கும் முனிவர் ஒருவருக்கு வரமருளும் காட்சியை சுதை வேலைப்பாடமைந்த சிற்பங்களாக அமைத்துள்ளனர். பாய்ந்து வரும் அய்யன் அமர்ந்த குதிரையின் முன்னங்கால்களை இரண்டு வீரர்கள் தங்கள் தலைகளில் தாங்குகின்றனர். இவ்வீரர்கள் பருத்த உடலுடன், பெரிய மீசையுடன், திடகாத்திர தோற்றங் கொண்டராய், கைகூப்பி வணங்கிய நிலையில் நிற்கின்றனர். வீரர்களுக்கே உரிய அரையாடை இடையில் உடுத்தியுள்ளனர். தலையலங்காரம் பாண்டியநாட்டு மக்களின் அலங்காரத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. அணிகள் பலவும் பூண்டுள்ளனர்.
932 : _ _ |a அய்யனார் கோயில் தற்காலத்தில் புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளது. பல வண்ணங்களுடன் கூடிய அழகிய திருக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. அய்யனாரின் கருவறை முற்காலத்தில் கல்லால் கட்டப்பட்டிருக்கலாம். தற்காலத்தில் எடுப்பிக்கப்பட்ட முன் மண்டபம் செங்கலால் கட்டப்பட்டதாய் வர்ணம் பூசப்பட்டு விளங்குகிறது. கருவறையின் நாற்புறமும் பூதகணங்கள் காவல் காக்கின்ற சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன.
933 : _ _ |a ஊர் நிர்வாகம்
934 : _ _ |a தென்கரை சிவன்கோயில், திருவேடகம் ஏடகநாதர் கோயில்
935 : _ _ |a சோழவந்தானிலிருந்து ஊத்துக்குளிக்கு உள்ளூர் பேருந்து செல்கிறது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a ஊத்துக்குளி
938 : _ _ |a சோழவந்தான்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00425
barcode : TVA_TEM_00425
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00425/TVA_TEM_00425_மதுரை_அயன்தென்கரை_ஸ்ரீ-அய்யனார்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00425/TVA_TEM_00425_மதுரை_அயன்தென்கரை_ஸ்ரீ-அய்யனார்-கோயில்-0001.jpg

TVA_TEM_00425/TVA_TEM_00425_மதுரை_அயன்தென்கரை_ஸ்ரீ-அய்யனார்-கோயில்-0002.jpg

TVA_TEM_00425/TVA_TEM_00425_மதுரை_அயன்தென்கரை_ஸ்ரீ-அய்யனார்-கோயில்-0003.jpg

TVA_TEM_00425/TVA_TEM_00425_மதுரை_அயன்தென்கரை_ஸ்ரீ-அய்யனார்-கோயில்-0004.jpg